Saturday, September 5, 2015

நான் அல்ல நீதான்

 நான் அல்ல நீதான்

கீதை படித்து விட்டால் திருவாசகம் புரியும்.
திருவாசகம் படித்தால் பகவத் கீதையைப் புரிந்து கொள்ளலாம்.

திருவாசகத்தின் விகுதி என்ன? சத்தியம்தான்.

உலகின் மகா சக்தியிடம் பரிபூரண சரணாகதி என்பது தான் திருவாசகம்

பகவத் கீதை இரண்டின் விழுப்பொருள்!

பகவத் கீதை பற்றி 6 மாதம் பேருரை நிகழ்த்தினார் ஆச்சார்யா வினோபாபாவே! அவர் மிகப் பெரிய ஞானி! வேதகாலத்து மகரிஷிகளை நமக்கு நினைவூட்டுபவர்.

ஆச்சார்யா வினோபாவை மகாத்மா காந்தியிடம் அனுப்பினார்கள். அவரை பார்த்து பேசிய பிறகு மகாத்மா காந்தி எழுதினார். " எனக்கு ஆசிரியராக இருக்க வேண்டிய ஒருவரை ஏன் மாணவர் என்று அனுப்பி இருக்கிறீர்களே" என்று வினோபாவின் தந்தைக்கு மகாத்மா எழுதினார்.

அப்படிப்பட்ட ஆச்சார்யா வினோபா சொன்னார். " ஆறுமாதகாலம் கீதையைப் பற்றிப் பேசினேன். இவை அனைத்தும் இரண்டே இரண்டு வார்த்தையில் முடிந்துவிட்டது. அவை என்ன? நான்  (மனிதன்) என்பதில் ஆரம்பித்து நீ (இறைவன்) என்பதில் முடிந்து விட்டது" என்றார் வினோபாவே!

அதுபோல் "எல்லாம் நீ! அப்பன் நீ! அம்மை நீ! நீதான்! நான் இல்லை!" என்பது திருவாசகம்.

அத்தனை பாடல்களும் வேண்டாம். ஒருவரி! ஒரே ஒரு வரி! " நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே!" இந்த வரியை நினைவில் கொண்டால் போதும்.

எது நேருமோ! என்று நேருமோ! அது உன் சித்தம். இது தான் நமது பிரார்த்தனை !

திருவாசகத்தில் உள்ள அத்தனைப் பாடல்களும் என்ன சொல்கின்றன? "எல்லாம் உன் சித்தம்! இறைவா!!" இது தான் திருவாசகம் சொல்வது.

இது தான் பகவத் கீதை சொல்வது.

இது தான் திருவருட்பா சொல்வது.

இப்போது பாருங்கள், " முத்தி நெறி அறியாத மூர்க்கரோடு முயல்வேனைப் பக்தி நெறி அறிவித்து!"

"சித்தமலம் அறிவித்து சிவமாக்கி..."

"இமைப்பொழுதும் ஏன் நெஞ்சின் நீங்காதான் தாள் வாழ்க !"

'விடுமின் வெகுளி'  இப்படி எல்லாவற்றையும் சொல்லிவிட்டு மாணிக்கவாசகர் சொல்கிறார்" அத்தன் எனக்கு அருளியவாறு"என்கிறார்!

"நான் யார் ? நானா சொல்கிறேன்?எனக்கு அவன் அருளியதைச் சொல்கிறேன்"

"அவன் சித்தம்"என்கிறார்.

"நன்றே செய்வாய் பிழை செய்வாய் நானோ இதற்கு நாயகமே!"என்கிறார்.

பகவத் கீதை, திருவாசகம்இரண்டும் ஒன்றே!

இரண்டும் சொல்வது ஒன்றே!

'நான் இல்லை! நீ தான்! எனவே அவன் நன்றே செய்தாலும்,பிழை செய்தாலும் அது அவன் செயல் அவன் சித்தம் என்று ஒப்படைத்து விடுங்கள்!'

அவன் பார்த்துக் கொள்வான்! மீண்டும் சொல்கிறேன்! நான் இல்லை! நீ தான் என்று பகவானிடம் எல்லாவற்றையும் ஒப்படைத்து விடுவது தான் பகவத் கீதை! அது தான் திருவாசகம்! அது தான் திருவருட்பா ! 

Saturday, August 22, 2015

sundaragandam

சுந்தரகாண்டம்
சுந்தரகாண்டம் படிப்பது தடைகள் போக்கி சுபங்களை சேர்க்கும் என்பர்.
இப்பாடலைச் சொல்வது, சுந்தரகாண்டம் முழுவதும் படித்த பலன் தரும்.

சீராரும் திறல் அனுமன் மாகடலைக் கடந்தேறி
மும்மதிள் நீளிலங்கை புக்குக்கடிகாவில்
வாராரும் முலை மடவாள் வைதேகிதனைக் கண்டு
நின்னடியேன் விண்ணப்பம் கேட்டருளாய்
அயோத்தி தன்னில் ஓர்
இடவகையில் எல்லியதோது இனிதிருக்க
மல்லிகை மாமலை கொண்டாங் கார்த்ததுவும்
கலக்கியமா மனத்தினனாய் கைகேயிவரம்  வேண்ட
மலக்கியமா மனத்தினனாய்
மன்னவனு மறாதொழியக்
குலக்குமரா காடுரைப்போ என்று விடை கொடுப்ப
இலக்குமணன் தன்னொடு சுங்கு யேகியதும்
கங்கை தன்னில் கூரணிந்த வேல் வலவன் குகனோடு
சீரணிந்த தோழமை கொண்டதுவும்
சித்திர கூடதிருப்ப பரதநம்பி பணிந்ததுவும்
சிறுகாக்கை முலைதீண்ட அனைத்துலகும் திரிந்தோடி
வித்தகனே இராமா நின் அபயமென்ன
ஆத்திரமே அதன் கண்ணை அறுத்ததுவும்
பொன்ஒத்த மானென்று புகுந்து இனிது விளையாட
நின் அன்பின் வழிநின்று சிலைபிடித்து எம்பிரான் ஏகப்
பின்னே அங்கு இலக்குமணன் பிரிந்ததுவும்
அயோத்தியர் கோன் உரைத்த அடையாளம்
ஈதுஅவன் கைமோதிரம் என்று
அடையாளம் தெரிந்துரைக்க
மலர்க் குழவாள் சீதையும்
வில் இறுத்தான் மோதிரம் கண்டு
அநுமான் அடையாளம் ஒக்கும் என்று
உச்சிமேல் வைத்து உகக்க
திறல் விளங்கு மாருதியும்
இலங்கையர் கோன்மாக் கடிக்காவை இறுத்துக்
காதல் மக்களும் சுற்றமும் கொன்று
கடி இலங்கை மலங்க எரித்து
அரக்கர்கோன் சினமழித்து, மீண்டும் அன்பினால்
அயோத்தியர் கோன் தளர் புரையும் அடி இணைபணியச் சென்றான்.


Saturday, July 11, 2015

ariya slogam

ஒன்றுகொ லாமவர் சிந்தை  யுயர்வரை
ஒன்றுகொ லாமுய ரும்மதி சூடுவர்
ஒன்றுகொ லாமிடு  வெண்டலை கையது
ஒன்றுகொ லாமலர் ஊர்வது தானே

இரண்டுகொ லாமியை யோர்தொழுபாதம்
இரண்டுகொ லாமிலங் குங்குழை பெண்ணாண்
இரண்டுகொ லாமுரு வந்சிறு மான்மழு
இரண்டுகொ லாமவர் எய்தின தாமே.

மூன்றுகொ லாமலர் கண்ணுத லாவன
மூன்றுகொ லாமவர் சூலத்தின் மொய்யிலை
மூன்றுகொ லாங்கணை கையது வில்நாண்
மூன்றுகொ லாம்புர மெய்தன தாமே .

நாலுகொ லாமவர் தம்முக மாவன
நாலுகொ லாஞ்சன னம்முதற் றோற்றமும்
நாலுகொ லாமவர் ஊர்தியின் பாதங்கள்
நாலுகொ லாமறை பாடின தாமே.

அஞ்சுகொ லாமவர் ஆடர வின்படம்
அஞ்சுகொ லாமவர் வெல்புல னாவன
அஞ்சுகொ லாமவர் காயம்பட் டான்கணை
அஞ்சுகொ லாமவர் ஆடின தாமே.

ஆறுகொ லாமவர் அங்கம் படைத்தன
ஆறுகொ லாமவர் தம்மக னார்முகம்
ஆறுகொ லாமவர் தார்மிசை வண்டின்கால்
ஆறுகொ லாஞ்சுவை யாக்கின தாமே .

ஏழுகொ லாமவர் ஊழி படைத்தன
ஏழுகொ லாமவர் கண்ட இருங்கடல்
ஏழுகொ லாமவர் ஆளு முலங்கள்
ஏழுகொ லாம்இசை யாக்கின தாமே

எட்டுக்கொ லாமவர் ஈறில் பெருங்குணம்
எட்டுக்கொ லாமவர் சூடு மினமலர்
எட்டுக்கொ லாமவர் தோளிணை யாவன
எட்டுக்கொ லாந்திசை யாக்கின தானே.

ஒன்பது போலவர் வாசல் வகுத்தன
ஒன்பது போலவர் மார்பினில் நூலிழை
ஒன்பது போலவர் கோலக் குழற்சடை
ஒன்பது போலவர் பாரிடந் தாமே.

பத்துக்கொ லாமவர் பாம்பின்கண் பாம்பின்பல்
பத்துக்கொ லாமெயி ருன்னெரித் துக்கன 
பத்துக்கொ லாமவர்   காயப்பட்ட டான்தலை
பத்துக்கொ லாமடி யார்செய்கை தானே.      

Wednesday, July 8, 2015

3

விநாயகர் கைகளில் ஏந்திய பொருள்கள் 

திருத்தலம்                                              விநாயகர் ஏந்திய பொருள்கள் 
பிள்ளையார்பட்டி                                 லிங்கம் 
திருப்பரங்குன்றம்                                கரும்புவில் 
உடையார்பாளையம்                          வில் 
சென்னை, திருவல்லிக்கேணி       
பார்த்தசாரதி கோவில்                        வெண்ணை 
சென்னை, மாங்காடு 
வெற்றி விநாயகர் கோவில்             மாம்பழம் 
திருப்பாதிரிப்புலியூர்                           பாதிரிப்பூக்கள் 
சேலம்,சுகவனேஸ்வரர்                    இரு கைகளில் 
கோவில்                                                   இரு மோதகங்கள் 
பவானி (திருநணா )                             வீணை 
ஸ்ரீசைலம் (திருப்பருப்பதம்)            குழல் 
கும்பகோணம்                                       உதிராட்ச 
நாகேஸ்வரர் கோவில்                      மாலை  

ஐந்து கரத்தனை ஆணை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றினை
நந்தி மகன்தனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைய்த்தடி போற்றுகின்றனே

Monday, July 6, 2015

continuation

காளியை உபாசிக்க சகல நலன்களையும் பெறலாம்.
இவள் கலியுக தெய்வம், தன்னை நம்பியவரை கை விடாதவள்.
க்ஷத்ரியர் ஆன விஸ்வாமித்ரர் வசிஷ்டருடன் ஏற்பட்ட மோதலில் தோல்வியுற்றார்.
ஓர் அந்தணணிடம் தான் தோற்றதை அவரால் ஏற்க முடியவில்லை.
தானும் அந்தணனாக வேண்டுமென நான்முகனையும் விஷ்ணுவையும் நோக்கி தவமிருந்தார். அவர்களால் அவரை அந்தணன் ஆக்க முடியவில்லை.
அதனால் பரமேஸ்வரனை குறித்து தவமிருந்தார் விஸ்வாமித்ரர்.
ஈசன் அவரன் முன் தோன்றி காளியின் ஏகாட்ஷர மந்திரத்தை ஜபம் செய்தால் அவர் கோரிக்கை நிறைவேறுமென்று கூறியருளினார். அவரும் அந்த மந்திரத்தை உருவேற்ற, அதனால் மனமகிழ்ந்த காளி பரமேஸ்வரருடன் அவர் முன் ப்ரத்யட்சமாகி அவரை அந்தணர் ஆக்கினாள். எனவே தான் அவருக்கு சகல சாஸ்திர ஞானமும் கிட்டின. வஷிஷ்டரே அவரை பிரம்மரிஷி என அழைத்ததன் பின்னணியில் காளி தேவியின் அருட்கடாக்ஷமே இருந்துது.
ஆனந்த ராமாயணத்தில் சீதா தேவி காளியின் அம்சம் என குறிப்பிடப்பட்டுள்ளது. எல்லா தேவர்களும் அவளுள் அடக்கம்.
அவளை  வழி பட்டாலே அணைத்து தேவ தேவியரை வழிபட்ட பலன் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.
சர்வ மங்கல வித்யா என்று தக்ஷின காளியின் த்ரிசதீ ஸ்தோத்ரம் அழைக்கபடுகிறது. இறந்தவனையும் உயிர்பிக்க கூடிய "ம்ருத  சந்ஜீவினி சக்தி காளி தேவிக்கு மட்டுமே உண்டு.
பகவான் ஸ்ரீமன் நாராயணன் யோகா நித்திரையில் இருக்கும்போது தோன்றிய மது கைடபர் எனும் அசுரர்களை வதைக்கும் பொருட்டு தாமரையில் பிறந்த பிரம்மன் எந்த தேவியை வழிபட்டு துதிதாரோ அவளே மகா காளி.
அம்பிகையின் ரூப பேதங்களுக்கு ஏற்றவாறு பல சக்கரங்கள் எந்திரங்கள் இருந்த போதிலும் எப்படி ஸ்ரீ சக்கரம் ஒன்றை வெய்தே எல்லா தேவதைகளையும் வழிபடலாம் என விதிமுறைகள் உள்ளதோ அதை போலவே தக்ஷின காளியின் எந்திரத்தை வெய்துக்கொண்டே எல்லா காளிதேவியின் மந்திரங்களையும் பூஜிக்கலாம் என தந்திர சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கொல்கத்தாவில் ராமகிருஷ்ணர் உபாசித்த கொல்கத்தாகாளி,
உஜ்ஜைனியில் காளிதாசன் வழிபட்ட மகாகாளி,
ஹிமாசலத்தில், சிம்லா முதல் கல்கா வரை ஒன்பது காளி தேவிகள்,
இமயத்தில் அலகானந்த நதிக்கரையில், கம்சமர்தினி, த்வாரக பீட அதி தேவதையான காளி ,துள்ஜாபூர் பாவநிஎனும் காளி ,
 மயிலை கோலவிழி காளி, மயிலை பச்சைப்பட்டு கோலவிழி காளி,
பச்சை காளி , அபர்ணா காளி, தங்க காளி ,அதிசய காளி, கைலாச அதிசய பார்வதி காளி, கேரள கொடுங்களூரில் பகவதி காளி, திருமலை ராயன்பட்டினம் ஆயிரம் காளி, கோகர்ணத்தில் பத்ரகாளி, தில்லையிலே தில்லை காளி, காஞ்சியின் ஆதிபீதேச்வர காளி, உறையூரில் வெக்காளி, தேரஎழுந்தூரில் கம்பன் பூஜித்த கம்பன் மாகாளி, திருவாசூரில் மதுர காளி, சென்னை தம்புசெட்டி தெருவில், சிவாஜி வழிபட்ட, காளிகாம்பாள் காளி, சென்னை பழைய மாம்பலம் உமாபதி தெருவில் வங்க காளி,  உடையூரில் செல்வமாகாளி என எங்கெங்கும் காளிமாத ஆலயம் கொண்டு திருவருள் பாலித்து கொண்டிருக்கிறாள் .

Sunday, July 5, 2015

3 and 4


தடையாவும் நீக்கும் விடைவாகனன் துதி
(திருஞானசம்பந்தர் )


நின்னடியே வழிபடுவான் நிமலா நினைக் கருத
என்னடியா னுயிரைவவ்வே லென்றடர்கூற் றுதைத்த
பொன்னடியே பரவிநாளும் பூவொடுநீர் சுமக்கும்
நின்னடியார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே

மலைபுரிந்த மன்னவன்றன் மகளையோர்பால் மகிழ்ந்தாய்
அலைபுரிந்த கங்கை தங்கும் அவிர்சடை ஆரூரா
தலைபுரிந்த பலிமகிழ்வாய் தலைவனின்தாள் நிழற்கீழ்
நிலைபுரிந்தார் இடர்களையாய் நெடுங்களம் மேயவனே.

பக்தி பெருகும்

Thursday, July 2, 2015

பணிவே பலம்

பணிவே பலம்

நற்பணிகள் செய்து புகழ்பெற்ற கோடீஸ்வரர் ஒருவர் வாழ்ந்து வந்தார்.
மூன்று ஏழைகள் அவரை அணுகி அவரிடம் இருந்து பொருளதவி  பெற விரும்பினர்.

முதல் நபர் அவரை அணுகி, "அய்யா ! எனக்கு ஐந்து ரூபாய் வேண்டும், தயவு செய்து கொடுங்கள் என்று கேட்டார் ".
அவனது குரலில் இருந்த அகம்பாவத்தை கண்டு கோடீஸ்வரர் திடுக்கிட்டார்.
"நான் உன்னிடம் கடன் பட்டிருப்பது போலல்லவா நீ என்னிடம் அதிகாரத்துடன் கேக்டிறாய்? உனக்கு எவ்வளவு துணிச்சல்! ஒரு பிச்சை காரனுக்கு எப்படி நான் ஐந்து ருபாய் தர முடியும்? இதோ இந்த இரண்டு ரூபாயை எடுத்துக்கொண்டு இங்கிருந்து சென்றுவிடு", என்று சொல்லி இரண்டு ருபாய் கொடுத்தார். அந்த நபர், அதை வாங்கிக்கொண்டு அங்கிருந்து நகன்றான்.

இரண்டாவது நபர் அங்கு வந்தான். " அய்யா! நான் கடந்த பத்து நாட்களாக ஒரு வேளை உணவு கூடச்சாபிடவில்லை, தயவு செய்து எனக்கு உதவி செய்யுங்கள் என்று வேண்டினான்". "இந்த பத்து ரூபாயை பெற்றுக்கொள், மூன்று நாட்கள் நீ திருப்தியாக உணவு உண்ணலாம்", என்று வேண்டி கோடீஸ்வரர் அவனுக்கு பத்து ருபாய் கொடுத்தார். அதை பெற்றுக்கொண்டு அங்கிருந்து அகன்றான்.

அதன் பின் மூன்றாமவன் அவரிடம் வந்தான். " அய்யா, உங்களுது உயர்ந்த குணங்களை பற்றி நான் கேள்வி பட்டுரிக்கிரேன், எனவே நான் உங்களை தரிசிக்க வந்தேன். அறவழியில் வாழும் நீங்கள் ஏழைகளின் கண் கண்ட தெய்வம் ஆவீர்கள் என்றான்".அவனது பண்பான பேச்சை கேட்டு மனம் கவரப்பட்ட அந்த கோடீஸ்வரர்,"அய்யா  தயவு செய்து உட்காருங்கள், நீங்கள் மிகவும் களைத்து போயிருக்கிரீர்களே என்றார்". உண்ட பின்னர் கோடீஸ்வரர் அவனை நோக்கி, " இப்பொழுது நான் உங்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுங்கள்,  அப்படியே செய்கிறேன் என்றார்". தன் மீது அவர் காட்டிய அன்பை கண்டு நெகிழ்ந்து போன அவன், " அய்யா, பசிக்கு அறுசுவை உணவை அளித்தீர்கள், அது போதும் எனக்கு, வேறு எதுவும் தேவை இல்லை.
தாங்கள் ஏன் மீது காட்டிய அபரிதமான அன்பை நான் என்னென்பேன்! உங்களுக்கு கடவுள் அணைத்து நலன்களையும் அருள்வாராக" என்று கண்ணீர் மல்கக்கூறினான். அவனது பணிவான வார்த்தைகளால், கோடீஸ்வரருக்கு
அவன் மீதிருந்த அன்பு பன்மடங்கு கூடியது. தன்னுடனே இருந்து விடுமாறு அவனை அவர் கேட்டுக்கொண்டார். தமது பங்களாவுக்கு அருகிலயே ஒரு வீடும் கட்டி கொடுத்தார். அவரது வாழ் நாள் முழுவதும் அன்புடன் உபசரித்தார்.

கடவுள் கோடிஸ்வரனை போன்றவர். மூன்று நபர்களும் மூவகை பக்தர்களை குறிப்பிடுகின்றனர் .

கடவுளிடம் என்ன கேட்க வேண்டும், எப்படி கேட்க வேண்டும் என்பதை அறியாதவர்கள் முதல்வகை பக்தர்கள்.
கடவுள்  கொடுத்தது போதும், தங்களுக்கு தேவையானதை அவர் அறிவார் என்பவர் இரண்டாம்வகை பக்தர்கள்.
இறைவா! எல்லாம் நீயே, உன் அருளால் நாங்கள் வாழ்கிறோம், நீ தருவது அனைத்தும் அருட்ப்ரசாதம் என்று சதா இறைவனை போற்றுபவர்கள் மூன்றாம் வகை பக்தர்கள்.
அவர்களே சீரிய பக்தர்கள். கடவுள் அனைவருக்கும் அருள் புரிகிறார் என்றாலும், மூன்றாம் வகை பக்தர்களுக்கு அனைத்தையும் தந்து அருள் பாலிக்கிறார்.

++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++++